கில்லி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கில்லி. இப்படத்தை கடந்த வாரம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்தனர்.
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் பல கோடிகளை வசூல் செய்து சாதனைகளை படைத்து வருகிறது. இந்த ஆண்டு வெளிவந்த வேறு எந்த தமிழ் திரைப்படங்களுக்கும் கிடைக்காத ஓப்பனிங் கில்லி படத்திற்கு கிடைத்துள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்த இயக்குனர்
இந்த நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கும் வகையில் இயக்குனர் தரணி, கில்லி திரைப்படத்தில் விஷயம் ஒன்றை செய்துள்ளார்.
இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருத்தவர் நடிகை ஜானகி சபேஷ். இவர் தற்போது 49 வயது ஆகிறது. அதே போல் கில்லி திரைப்படத்தில் இவருக்கு மகனாக நடித்து விஜய்க்கும் தற்போது 49 வயது தான் ஆகிறது.
இருவருக்கும் ஒரே வயதாக இருந்தாலும், ஜானகி சபேஷை விட விஜய் 3 மாதங்கள் பெரியவர் ஆவார். இப்படி இருக்க அவரை தான் விஜய்க்கு அம்மாவாக கில்லி படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் தரணி. இந்த விஷயம் கில்லி ரீ-ரிலீஸ் ஆகியுள்ள இந்த சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
You May Like This Video