ரீ-ரிலீஸாகும் கில்லி படம் ப்ரீ புக்கிங்கில் செய்து வரும் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
கில்லி
இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தெலுங்கில் வெளிவந்த ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக்காக கில்லி இருந்தாலும், பல மாற்றங்களை செய்து சற்று வித்தியாசமான திரைக்கதையில் இப்படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் தரணி.
ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்
விஜய்யின் திரை வாழ்க்கையில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் கில்லி கடந்த 2024ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதுவரை ரீ-ரிலீஸான படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை கில்லி படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வருகிற 20ஆம் தேதி மீண்டும் கில்லி படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இதற்கான ப்ரீ புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 10 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri