ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் விஜய்யின் கில்லி- இவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை ஆனதா?
விஜய்யின் கில்லி
விளையாட்டு மற்றும் காதலை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆகியுள்ளது.
ஆனால் விஜய்யின் கில்லி படத்தை தோற்கடிக்கும் வகையில் இதுவரை இந்த கதைக்களத்தில் எந்த படமும் பெரிய அளவில் வெற்றிப்பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.
தர்ஷினி திருமணத்தை நிறுத்த புதிய எண்ட்ரி கொடுத்த பிரபலம்: யார் அவர், எதிர்நீச்சல் சீரியல் ஸ்பெஷல் புரொமோ
தற்போது விஜய்யின் கில்லி படம் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், தமிழ்நாட்டை தாண்டி வெளிநாட்டில் தளபதி வெறியர்கள் மாஸாக கொண்டாட்டம் போடுகிறார்கள்.

முக்கிய விவரம்
கில்லி படம் மாஸாக ஓடிக் கொண்டிருக்க புக் மை ஷோவில் தாறுமாறு டிக்கெட் புக்கிங் நடந்துள்ளது.
தற்போது இதுவரை கில்லி படத்திற்காக எவ்வளவு டிக்கெட் புக்கிங் விவரம் வந்துள்ளது என்ற விவரத்தை புக் மை ஷோவில் வெளியாகியுள்ளது.
அதாவது ரீ-ரிலீஸ் ஆன கில்லி படத்திற்கு 314.19K டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri