ரீ-ரிலீஸில் வசூல் சாதனை படைத்த விஜய்யின் கில்லி.. இதுவரை எவ்வளவு தெரியுமா
கில்லி
விஜய்யின் மஸ்டர்பீஸ் திரைப்படங்களில் ஒன்று கில்லி. பிரபல இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த ஒக்கடு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் கில்லி. ரீமேக் திரைப்படமாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பால் தனக்கென்று தனி மாஸை உருவாக்கினார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வில்லன் என்று தமிழ் சினிமாவில் டாப் 10 லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக கில்லி படத்தில் வரும் முத்துப்பாண்டி கதாபாத்திரமும் இடம்பெறும்.
ரீ-ரிலீஸ் வசூல்
அந்த அளவிற்கு நகைச்சுவையாகவும், அதே சமயத்தில் வில்லத்தனத்துடனும் நடித்திருப்பார். சமீபகாலமாக ரீ-ரிலீஸ் கலாச்சாரம் பெருகி வருகிறது. பாபா, ஆளவந்தான், வாரணம் ஆயிரம், 3 ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வரிசையில் தற்போது கில்லி படமும் வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில், ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை ரூ. 65 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளதாம் கில்லி.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
