கோடிகளை தாண்டும் கில்லி படத்தின் வசூல்.. ரீ-ரிலீஸில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும் விஜய்
ரீ-ரிலீஸ்
சமீபகாலாமாக ரீ-ரிலீஸ் கலாச்சாரம் பெருகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த கல்ட் திரைப்படங்களை மீண்டும் திரையிடுகின்றனர்.
பாபா, ஆளவந்தான், 3, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் தற்போது விஜய்யின் கில்லி படமும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல் : இரண்டாம் முறை கர்ப்பமான ராதிகா! தாத்தாவான பின் மீண்டும் தந்தையான குஷியில் கோபி
தமிழ் சினிமாவின் மாபெரும் கல்ட் கமெர்ஷியல் திரைப்படம் கில்லி. தரணி இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கில்லி வசூல் சாதனை
இந்த நிலையில், வருகிற 20ஆம் தேதி இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இந்த நிலையில், ரீ-ரிலீஸில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் லேட்டஸ்ட் திரைப்படங்கள் தான் வசூல் சாதனைகளை செய்கிறது என்று பார்த்தால், ரீ-ரிலீஸ் ஆகும் திரைப்படம் கூட மாபெரும் அளவில் சாதனை படைத்து வருகிறது.

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
