என் உண்மையான வயது இதுதான்.. சர்ச்சைக்கு கில்லி விஜய் அம்மா கொடுத்த விளக்கம்
கில்லி படம் பற்றி தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 20 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூல் குவித்து கொண்டிருக்கிறது இந்த படம்.
ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி பாடல்களுக்கு டான்ஸ் ஆடும் வீடியோக்களும் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் படத்தை பற்றி பல்வேறு விஷயங்களும் பேசுபொருளாக மாறி இருக்கின்றன.
கில்லி படத்தில் அம்மாவாக நடித்த ஜானகி கணேஷ் விஜய்யும் ஒரே வயது தான். விஜய்யை விட அவருக்கு 3 வயது குறைவு என ஒரு செய்தி பரவியது.
விளக்கம்
இது பற்றி நடிகை ஜானகி கணேஷ் விளக்கம் கொடுத்து இருக்கிறார். 'சான்ஸ் இல்லை. யாரோ பொய்யாக என் பிறந்தநாளை பரப்பி இருக்கின்றனர்."
"நான் இப்போ சீனியர் சிட்டிசன் ஆக போகிறேன் (60 வயதுக்கு மேல்) . நானும் விஜய்யும் ஓரே வயது எல்லாம் இல்லை" என அவர் கூறி இருக்கிறார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
