கில்லி ரிலீஸின் போது தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான்.. உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்
கில்லி
இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. இப்படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்தார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பலரும் நடித்திருந்தனர்.
விஜய்யின் திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையாக கில்லி திரைப்படம் அமைந்தது. இன்று வரை விஜய் ரசிகர்களின் டாப் 10 திரைப்படங்களில் கண்டிப்பாக இப்படமும் இருக்கும். அந்த அளவிற்கு இப்படத்தை செதுக்கியிருப்பார் இயக்குநர் தரணி. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
உண்மையை போட்டுடைத்த பிரபலம்
ஆனால், கில்லி படம் வெளிவந்த சமயத்தில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் அவர்களின் நெருங்கிய நண்பரும் முக்கிய பிரபலமுமான ஒருவர் அளித்த பேட்டியில், "கில்லி படம் இன்று ரீ ரிலீஸில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால், கில்லி ரிலீஸ் ஆன நேரத்தில் தயாரிப்பாளர் ரத்னம் தனது 14 கிரவுண்ட் இடத்தை எழுதி கொடுத்துதான் படத்தை ரிலீஸ் செய்தார். இன்றைக்கு அந்த இடத்தின் மதிப்பு ரூ. 60 - 70 கோடி ஆகும். ஆனால், அன்று ரூ. 2.90 கோடிக்கு எழுதி கொடுத்துதான் கில்லி படத்தை ரிலீஸ் செய்தார். அது அப்போது அவருக்கு லாபம் இல்லை" என அவர் கூறியுள்ளார்.
இதன்பின், கடந்த ஆண்டு கில்லி ரீ ரிலீஸ் ஆனது. அப்போது தயாரிப்பாளர் ரத்னத்திற்கு லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
