சாச்சனாவிற்கு உதவி செய்த அருண்.. செக் வைத்த பெண்கள் அணி.. பிக் பாஸ் ப்ரோமோ
பிக் பாஸ்
பிக் பாஸ் 8 ஆரம்பித்த முதல் நாளே ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. பெண்கள் அணிக்கும் சிங்கிள் பெட் கொண்ட அறை வேண்டும் என்றால், ஆண்களை ஒரு வாரம் நாமினேட் செய்ய கூடாது என அந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
அதே போல் பெண்கள் அணி போட்ட விதியை ஆண்கள் அணியினர் மீறினால், ஆண்கள் அணி போட்ட விதி தகர்த்தெறியப்படும் என பெண்கள் கூறி இருந்தனர்.
செக் வைத்த பெண்கள் அணி
இந்த நிலையில், இன்று ஒளிபரப்பாக உள்ள எபிசோடில், சாச்சனாவிற்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. இதனால் சாச்சனா confession room-க்கு வரும்படி பிக் பாஸ் சொல்கிறார். சாச்சனாவிற்கு உதவி செய்யும் வகையில் அருண் அவரை அழைத்து கொண்ட confession room செல்கிறார்.
இதை கவனித்த பெண்கள் அணியினர், தங்களிடம் கேட்காமல் அருண் confession room சென்று விட்டார், இதனால் நாமினேஷன் குறித்து ஆண்கள் அணி சொன்ன விதி இனிமேல் செல்லுபடி இல்லை என பெண்கள் கூறி விடுகிறார்கள். இதற்காக தற்போது பெண்கள் அணிக்கும், ஆண்கள் அணிக்கும் இடையே கடும் விவாதமே நடக்கிறது.
ப்ரோமோ - 1
ப்ரோமோ - 2

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
