வேணும்னு பண்ணிட்டாங்க, திருட்டு பயலுங்க.. பெண்கள் அணியை தவறாக பேசிய முத்து! பிக் பாஸ் ப்ரோமோ
ஹோட்டலாக மாறிய பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் வீடு இந்த வாரம் ஹோட்டலாக மாறியுள்ளது. நேற்றைய எபிசோடில் ஆண்கள் அணியை சேர்ந்தவர்கள் விருந்தினராக வந்தனர். பெண்கள் ஹோட்டல் நிர்வாகத்தை பார்த்தனர்.
இதில் தங்களுக்கு சரியாக சில விஷயங்களை பெண்கள் அணி செய்யவில்லை என கூறி குற்றச்சாட்டுகளை ஆண்கள் அணி எழுப்பினார்கள். ஹோட்டலில் இருக்கும் வெள்ளைநிற பலகையில் குற்றச்சாட்டுகள் இரண்டிற்கும் மேற்பட்டது இருந்தால், ஹோட்டலின் மேனேஜர் மாற்றப்படுவார் என பிக் பாஸ் கூறி இருந்தார், அதுவே விதிமுறையாகும்.
நேற்று பெண்கள் ஹோட்டலின் மேனேஜராக பவித்ரா இருந்தார். ஆண்கள் வைத்த குற்றச்சாட்டு இரண்டிற்கும் மேற்பட்டதாக இருந்த நிலையில், பவித்ரா மேனேஜர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சுனிதா மேனேஜர் பொறுப்பை ஏற்று கொண்டார்.
தன்னை மேனேஜர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் தான், ஆண்கள் அணி விளையாடியதாக பவித்ரா தனது கருத்தை முன் வைத்தார். இந்த விஷயத்தால் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
பெண்கள் அணியின் ரிவெஞ்
இந்த நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டில் பெண்கள் அணி விருந்தினர்களாக என்ட்ரி கொடுத்துள்ளனர். இதுகுறித்து வெளிவந்துள்ள பிக் பாஸ் ப்ரோமோவில், ஆண்கள் அணி ஹோட்டல் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் அல்ல பல குற்றச்சாட்டுகளை பெண்கள் வெள்ளை பலகையில் எழுதியுள்ளனர்.
இதனால் மேனேஜராக இருக்கும் முத்துக்குமரன் பதிவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த ஆதங்கத்தில் இருந்த முத்துக்குமரன், "வேணும்னு பண்ணிட்டாங்க, திருட்டு பயலுங்க" என பெண்கள் அணியை திட்டி தவறாக பேசியுள்ளார். நேற்று பவித்ராவுக்கு இப்படி செய்யும்போது தெரியவில்லையா முத்துக்குமரன் என நெட்டிசன்கள் ஒரு பக்கம் இந்த குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Nethu #Pavithra ah venum ne panathu nalla irunthuchaa ?? #Muthu?#Trollbiggbosstamil #BiggBosstamil #BiggBoss8Tamil #BiggBossTamil8 #பிக்பாஸ் #VJS #VijaySethupathi #VijaySethupathy #MuthuKumaranpic.twitter.com/d8LMTXRSQ6
— Troll Bigg Boss Tamil (@Tbbtamil) October 23, 2024

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
