பிக் பாஸ் Eviction-ல் இருந்து தப்பிக்கப்போகும் அந்த நபர் யார்! முடிவு எடுக்கப்போகும் பெண்கள் அணி
பிக் பாஸ்
பிக் பாஸ் 8ல் நேற்று ’யார் கெத்து’ என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இது மொத்தம் மூன்று லெவலாக பிரிக்கப்பட்டது. எந்த அணி அறிவில் சிறந்தது? டீம் ஒர்க்-ல் சிறந்தது? திறமையில் சிறந்தது? என போட்டி அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த டாஸ்கில் வெல்லும் அணி, தங்களுடைய அணியில் நாமினேட் ஆகியிருக்கும் ஒருவரை Eviction-ல் இருந்து காப்பாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் அணியினர் மற்றும் பெண்கள் அணியினர் கடுமையாக போட்டியிட்டனர்.
Eviction-ல் இருந்து தப்பிக்கப்போகும் நபர்
முதலில் நடந்த டாஸ்கில் பெண்கள் அணி வெற்றிபெற்றது. பின், இரண்டாவதாக நடந்த டாஸ்கில் ஆண்கள் அணி வெற்றிபெற்றது. இரு அணிகளும் சமமாக வெற்றிபெற்று இருந்த நிலையில், மூன்றவதாக நடந்துள்ள போட்டியில் பெண்கள் அணி வெற்றிபெற்றுள்ளனர்.
இதனால் பெண்கள் அணியில் நாமினேட் ஆகியிருக்கும் ஒருவரை காப்பாற்ற, அவர்களுக்கு நாமினேஷன் ஃபிரீ பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் அணி யாரை காப்பாற்ற போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். இதோ அதற்கான ப்ரோமோ வீடியோ..

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
