Gladiator 2 திரை விமர்சனம்
ஹாலிவுட் திரையுலகின் மிக வயதான இயக்குனர்களில் இன்றும் ட்ரெண்டில் இருப்பது ரெட்லி ஸ்காட். இவர் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் ஆகி, பல ஆஸ்கர் விருதுகளை குவித்த கிளாடியேட்டர் படத்தின் இரண்டாம் பாகம் 24 வருடம் கழித்து இன்று வெளிவர, படம் எப்படி என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே மேக்ஸிமஸ் இறந்து 16 வருடம் கழித்து இரண்டு பொறுப்பற்ற வாலிபர்கள் கையில் சிக்கி ரோம் நகரம் சீரழிந்து வருகிறது. ரோம் நகர மக்கள் ஒருவேளை சாப்பாடுக்கே கஷ்டப்படும் நேரத்தில் கூட தன் தளபதியை அனுப்பில் பல ஊர்களை கைப்பற்ற சொல்கின்றனர் அந்த இரண்டு இளவரசர்கள்.
தளபதி அப்படி ஆப்ரிக்கா நோவா பகுதியை கைப்பற்ற, அதிலிருந்த தளபதியை(லூசியஸ்) ரோம் நகரத்திற்கு கைது செய்து கொண்டு வர, அங்கு அவரை டென்சில் வாசிங்டன் கிளாடியட்டராக தேர்ந்தெடுத்து சண்டைக்கு அழைத்து செல்கிறார்.
ஆனால், சென்ற இடத்தில் தான் தெரிகிறது அவருடைய அம்மா இளவரசி அப்பா இறந்த மேக்ஸிமஸ் என்று, பிறகு அந்த 2 பொறுப்பற்ற இளவரசர்களுக்கும் லூசியஸ்-க்கு நடக்கும் யுத்தமே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
கிளாடியேட்டர் என்றாலே போரில் தோற்ற சரனடைந்த நாடுகளை சார்ந்த வீரர்களை ரோம் நகரின் பிரமாண்ட சண்டைக்களத்தில் சண்டை செய்ய விட்டு அதை வேடிகைக்க பார்த்து அரசர்களும் ரோம் மக்களும் மகிழ்வார்கள்.
அப்படி தன் சொந்த நாட்டிலேயே நேர்மையாக இருந்து துரோகம் இழைக்கப்பட்டு கிளாடியட்டராக மாறிய மேக்ஸிமஸ் மகன் லூசியஸ் கதை தான் இது, லூசியஸ் சிறு வயதிலேயே அவரின் நலன் கருதி அவருடைய அம்மா வேறு நாட்டிற்கு அனுப்புகிறார். ஆனால், காலம் எப்படியும் ஒரு நாட்டின் இளவரசனை அதுவே தேர்ந்தெடுக்கும் என்பது போல் லூசியஸ் தன் தாய் நாட்டிற்கு ஒரு கிளாடியட்டராக வாருகிறார்.
கிளாடியட்டராக வரும் லூசியஸ் தன்னால் முடிந்தளவு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார், பார்க்க சிறிய உருவமாக இருந்தாலும் களத்தில் அவர் எத்தனை பெரிய உருவங்களையும் சாய்ப்பது பிரமிப்பு. ஆனால், மேக்ஸிமஸின் அந்த தோரனை இவரிடம் மிஸ்ஸிங் தான்.
மேலும், டென்சில் வாசிங்டன் படத்தில் ஒரு கிளாடியேட்டர் தயார் செய்பவராக வந்து ஒட்டு மொத்த ரோம் நகரத்தையும் அவர் கைப்பற்ற போடும் சகுனி ஆட்டமே இந்த படம், அதை மிக திறம்பட செய்துள்ளார்.
கிளாடியேட்டர் முதல் பாகம் போல் விறுவிறுப்பாக சென்றாலும் அதில் இருந்து ஒரு அழுத்தமான காட்சிகள் இதில் இல்லை.
மேலும், அந்த காலம் என்றாலே ராஜாக்கள் கம்பீரமாக இருப்பார்கள் என்று நினைக்கையில், இரண்டு சிறுவர்களை அரசர் என காட்டி அவர்கள் செய்யும் கூத்துக்கள், கிறுக்குத்தனங்களை இயக்குனர் காட்டி, ராஜாக்கள் எவ்ளோ மோசமானவர்களாக இருந்தார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியுள்ளார், அதிலும் குரங்கை எல்லாம் மந்திரி பதிவியில் உட்கார வைக்கும் காட்சி எல்லாம் கொடுமை.
படத்தின் சண்டைக்காட்சிகள் அத்தனை தத்ரூபம், இரத்தம் தெறிக்க தெறிக்க பல சண்டைக்காட்சிகள், அதற்கு ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சூப்பர்.
க்ளாப்ஸ்
- படத்தின் கதைக்களம் முதல் பாகத்திலிருந்து இரண்டாம் பாகத்திற்கு கனேக்ட் செய்த விதம்
- சண்டைக்காட்சிகள்
டெக்னிக்கல் ஒர்க்
பல்ப்ஸ்
- முதல் பாகத்தில் இருந்த அழுத்தமான காட்சிகள் இதில் கொஞ்சம் குறைவு.
- கிளைமேக்ஸ் பெரிய திருப்பங்கள் இல்லாமல் யூகிக்கும்படி இருந்தது.