வேட்டையன் படத்தை இப்படி செய்துவிட்டார்கள்.. இயக்குனர் ஞானவேல் வேதனை
TJ ஞானவேல்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் TJ ஞானவேல். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வேட்டையன்.

தற்போது, சினிமாவில் வெளியாகும் படத்தின் மீது பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திரைப்படங்கள் மீது செலுத்தப்படும் வன்முறை குறித்து இயக்குனர் ஞானவேல் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
வேதனை
"தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு திரைப்படத்திற்கான நியாயமான விமர்சனங்கள் குறைந்துள்ளன. ஒரு படம் வெளிவந்த பின் அந்த படம் எப்படி உள்ளது என்பதை சமூக வலைத்தளத்தில் கூறப்படும் கருத்தை வைத்து முடிவு செய்கின்றனர்.

விமர்சனங்கள் செய்பவர்களுக்கு அந்த படத்தில் இருக்கும் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அந்த படம் நன்றாக இல்லை என்று கூறி விடுகின்றனர்.
அந்த கருத்தை நம்பி மக்களும் படத்தை குறை கூறுகின்றனர். அப்படி தான் வேட்டையன் திரைப்படத்திற்கும் கள்ளிப்பால் கொடுத்து விட்டனர்" என்று கூறியுள்ளார்.
வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu
ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu