ஞானவேல்ராஜா சொல்றது சுத்த பொய்.. சூர்யாவே இல்லைனு சொல்வாரு: நந்தா பட தயாரிப்பாளர்
கார்த்தியின் ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி நடித்த 25 படங்களின் இயக்குனர்களை அழைத்து பேச வைத்து இருந்தனர். ஆனால் அவரது முதல் படமான பருத்திவீரன் பட இயக்குனர் அமீரை அழைக்கவில்லை. அதனால் சூர்யா குடும்பம் மற்றும் இயக்குனர் அமீர் இடையே என்ன தான் பிரச்சனை என பேச்சு எழுந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு பேட்டியில் அமீர் பற்றி பல்வேறு புகார்களை கூறினார். கணக்கெழுதுவதில் மோசடி செய்தார் அமீர் என அவர் கூறி இருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். படம் தொடங்கி பாதி கூட முடியாத நிலையில் தயாரிக்க முடியாது என ஞானவேல் போய்ட்டாரு, படத்தை நீங்களே வெச்சுக்கோங்க என சூர்யா அமீரிடம் சொல்லிட்டார், அதன் பின் பல பேரிடம் கடன் வாங்கி தான் அமீர் இந்த படத்தை முடித்தார் என சமுத்திரக்கனி தெரிவித்து இருந்தார்.

ஞானவேல் ராஜா பேசுவது பொய்
அமீரின் முதல் படமான மௌனம் பேசியதே படத்தை நந்தா பட தயாரிப்பாளர் தான் எடுத்திருந்தார்.
தயாரிப்பாளர் சூர்யாவிடம் வேறொரு பிரபல இயக்குனரை வைத்து படமெடுக்கலாம், அதன் பின் அமீருக்கு வாய்ப்பு தரலாம் என கூறியதாக ஞானவேல் பேட்டி அளித்திருக்கிறார்.
இதற்கு நந்தா பட தயாரிப்பாளர் பதில் கொடுத்திருக்கிறார். "அது சுத்த பொய்.. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. சூர்யாவிடம் கேட்டாலே அது பொய் என சொல்வார். அமீரை தான் முதலில் ஓகே செய்தேன், அவர் சொன்ன கதைக்கு தான் சூர்யாவை அதன் பிறகு தேர்ந்தெடுத்தோம்" என அவர் கூறி இருக்கிறார்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri