மீண்டும் விஜய்க்கு போட்டியாக வரும் சூர்யா.. GOAT - கங்குவா படங்களின் பிசினஸ்
GOAT - கங்குவா
இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்கள் GOAT மற்றும் கங்குவா. விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
அதே போல் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது என கூறியுள்ளனர். இந்த நிலையில், GOAT - கங்குவா படங்களின் கேரளா உரிமை குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
GOAT - கங்குவா பிசினஸ்
விஜய்யின் லியோ திரைப்படம் கேரளாவில் ரூ. 16 கோடி முதல் ரூ. 17 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதனால் GOAT படத்தின் கேரளா உரிமை ரூ. 17 கோடி கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சூர்யாவிற்கு இதுவரை கேரளா உரிமை ரூ. 3 கோடி வரை மட்டுமே தான் விற்பனை செய்யப்பட்டு வந்தது என சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது கங்குவா படம் ரூ. 10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம்.
இதன் மூலம் கேரளாவில் அதிகம் விலை கொடுத்து வாங்கிய தமிழ் திரைப்படங்களில் டாப் 5 இடத்தில் விஜய்க்கு போட்டியாகவே சூர்யா இடம்பிடித்துள்ளார் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
