இலங்கை இல்லை.. GOAT கிளைமாக்ஸ் ஷூட்டிங் எங்கே நடக்கிறது பாருங்க
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் படம் The Greatest of All Time. இதை சுருக்கமாக GOAT என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.
சென்னை மற்றும் வெளிநாடுகளில் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கிறதாம். மார்ச் மாதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் பின் VFX பணிகளில் கவனம் செலுத்த இருப்பதாக வெங்கட் பிரபுவே தெரிவித்து இருந்தார்.
கிளைமாக்ஸ் ஷூட்டிங்
GOAT படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை இலங்கையில் படமாக்க திட்டமிட்டு அதற்கான லொக்கேஷன் பார்க்கும் பணிகளையும் வெங்கட் பிரபு செய்து வந்தார்.
ஆனால் தற்போது இலங்கைக்கு பதிலாக இந்தியாவிலேயே கேரளாவில் படமாக்க வெங்கட் பிரபு பரிசீலித்து வருவதாக தகவல் வந்திருக்கிறது.
திருவனந்தபுரத்தில் இருக்கும் Greenfield International Stadiumல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு வருகிறராம் இயக்குனர். இருப்பினும் இது பற்றி படக்குழு அறிவித்தால் தான் உறுதியாகும்.

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
