20 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
GOAT
செப்டம்பர் மாதம் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனையை படைத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் GOAT. தளபதி விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் படம் என்றாலே கண்டிப்பாக வசூலில் பல சாதனைகளை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த நிலையில், விஜய்யின் GOAT திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 20 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து பார்ப்போம்.
வசூல்
இதுவரை 20 நாட்களில் உலகளவில் GOAT படம் ரூ. 425 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது லியோ படத்தின் வசூலை விட குறைவு தான். மேலும் தமிழகத்தில் ரூ. 200 கோடியை கடந்த சில நாட்களுக்கு முன்பே கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திரையரங்கில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் GOAT திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 10ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. விரைவில் படக்குழுவிடம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
