21 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
GOAT
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் GOAT.
இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், ஒருசில இடங்களில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்த 21 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.
வசூல்
இந்த நிலையில் 21 நாட்களில் தமிழகத்தில் ரூ. 200 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துவிட்டது. ஆனால், உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க.
GOAT படம் இதுவரை உலகளவில் ரூ. 427 கோடி வரை வசூல் செய்துள்ளது. இப்படத்திற்கு முன் விஜய் நடித்து வெளிவந்த லியோ படம் உலகளவில் ரூ. 598 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், GOAT படம் இதுவரை ரூ. 427 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ள நிலையில், லியோ படத்தை முந்துவது என்பது சாத்தியமே இல்லை என தெரிகிறது

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
