G.O.A.T படத்தில் விஜய் - திரிஷா இணைந்து நடனமாடிய பாடல்.. ரிலீஸ் குறித்து வந்த அப்டேட்
GOAT
தளபதி விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்யுடன் பல ஆண்டுகளுக்கு பின் சினேகா நடித்துள்ளார்.
மேலும் இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி முதல் முறையாக தளபதியுடன் கைகோர்த்துள்ளார். இவர்களை தவிர லைலா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை அறிவோம். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
திரிஷா - விஜய் பாடல்
இதில் நடிகை திரிஷாவும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே அவர் நடனமாடியுள்ளாராம். இதுவரை மூன்று பாடல்கள் GOAT படத்திலிருந்து வெளிவந்த நிலையில், திரிஷா நடனமாடியுள்ள பாடல் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை.
இந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் GOAT படத்திலிருந்து ஸ்பெஷல் பாடல் ஒன்று வெளிவரும் என இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
இது திரிஷா - விஜய் இணைந்து நடனமாடிய பாடல் தான் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த பாடல் குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.