அந்த படத்தில் நடிக்க தயங்கினேன்.. GOAT பட நாயகி போட்டுடைத்த ரகசியம்
பார்வதி நாயர்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து, பார்வதி சமீபத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான GOAT படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பதை குறித்து பார்வதி நாயர் பகிர்ந்துள்ளார்.
போட்டுடைத்த ரகசியம்
அதில், " ஆம், நான் அந்த படத்தில் நடிக்க மறுத்ததற்கு முக்கிய காரணம், படத்தில் வரும் முத்தக் காட்சிகள் தான். அதுபோன்று காட்சிகளில் நடிக்க சற்று தயங்கினேன்.
ஆனால், அந்த படத்தில் நான் நடித்திருக்க வேண்டும் என்று படம் வெளியான பிறகு பலமுறை யோசித்தேன். அந்த அளவிற்கு படம் நன்றாக இருந்தது.
நம்முடையது எதுவோ அது கண்டிப்பாக நம்மை வந்து சேரும். அந்த வகையில், இதைவிட நல்ல படங்கள் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.