இலங்கையில் கோட் படம் செய்த வசூல் சாதனை.. எவ்வளவு தெரியுமா
கோட்
தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த்,சினேகா, பிரபு தேவா, லைலா, மீனாட்சி, மோகன் என பலரும் நடித்திருந்தனர். கேமியோ ரோலில் திரிஷா, சிவகார்த்திகேயன் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
இலங்கை வசூல்
உலகளவில் ரூ. 430 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள கோட் படம் இலங்கையில் இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை செய்துள்ளது. ஆம், இலங்கையில் இப்படம் ரூ. 30 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதனுடைய இந்திய மதிப்பு ரூ. 9.5 கோடியாகும்.

இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் இலங்கையில் இவ்வளவு வசூல் செய்தது இல்லை, இதுவே முதல் முறை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனையை இதன்பின் வரவிருக்கும் படங்கள் முறியடிக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu