தமிழ்நாட்டில் 3 நாட்களில் GOAT செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
GOAT
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் GOAT. பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.

பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக தளபதி விஜய்யுடன் ஏஜிஎஸ் நிறுவனம் கைகோர்த்துள்ள திரைப்படம் இதுவே ஆகும். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழக வசூல்
முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் GOAT திரைப்படத்தின் 3 நாள் தமிழக வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, GOAT 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 75 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மூன்றே நாட்களில் ரூ. 75 கோடியை கடந்துள்ள GOAT 4வது நாள் முடிவில் கண்டிப்பாக தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan