ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் GOAT.. மாஸ் காட்டும் தளபதி
GOAT
தளபதி விஜய்யின் நடிப்பில் பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ளார்.

பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்படும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த GOAT திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் நான்காவது பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 1000 ஸ்க்ரீன்களில் இப்படம் திரையிடப்படும் என தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார். மேலும் உலகளவில் 6000 ஸ்க்ரீன்களில் திரையிடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ப்ரீ புக்கிங் வசூல்
இந்த நிலையில், GOAT படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ப்ரீ புக்கிங் மட்டுமே ரூ. 100 கோடி வரை வசூல் வரும் என்கின்றனர்..

என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu