சிம்புவுடன் இணையும் டிராகன் வெற்றி கூட்டணி.. அப்போ ப்ளாக் பஸ்டர் உறுதி
God of love
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள திரைப்படம்தான் எஸ்.டி.ஆர் 51 'God of love'. டிராகன் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்கள்.
ஏற்கனவே இப்படத்திலிருந்து அறிவிப்பு போஸ்டர் வெளிவந்த நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
வெற்றி கூட்டணி
இந்த நிலையில், டிராகன் படத்தில் ப்ளாக் பஸ்டர் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் தான் God of love திரைப்படத்தின் இசையமைப்பாளர் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது டிராகன் பட கூட்டணியே மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan
