காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம் Official Trailer 2
ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான, ரசிகர்களை கவரக்கூடிய கதைக்களம் கொண்ட திரைப்படங்கள், காட்ஸில்லா மற்றும் கிங் காங் திரைப்படங்கள்.
காட்ஸில்லா - காங்
இந்த இரண்டையும் முதல் முறையாக காட்ஸில்லா vs காங் எனும் திரைப்படத்தில் இணைத்தனர். கதையின்படி இந்த மாஸ்டர்கள் அனைத்தும் பூமியின் காவலர்களாக இருந்தவர்கள் என கூறுகிறார்கள்.

பூமிக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் இவர்கள் வருவார்கள் என்று தான் காட்ஸில்லா மற்றும் காங் இருவரையும் அடையாளப்படுத்தி வருகின்றன.

இதுவரை வெளிவந்த படங்களிலும் அப்படி தான் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வரிசையில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தான் காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம்.

இதற்கு முன் வெளிவந்த காட்ஸில்லா vs காங் படத்தில் இருவரும் எதிரிகளாக இருந்தனர். கிளைமாக்ஸ் காட்சியில் ஒன்றிணைந்து வில்லனுக்கு எதிராக சண்டைபோட்டனர்.

ஓர் புதிய சாம்ராஜ்யம்
பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததன் காரணமாக இருவரும் தங்களுடைய இருப்பிடத்திற்கு சென்றுவிட்டனர். ஆனால், தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. ஸ்கார் கிங் என்கிற வில்லன் மூலம் வருகிற பிரச்சனையை காட்ஸில்லா அண்ட் காங் இருவரும் இணைந்து எதிர்கொள்கிறார்கள்.

காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம் எனும் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த நிலையில், தற்போது இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க..
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri