கிலோ கணக்கில் தங்கம் கடத்தி கைதான நடிகை ரன்யா.. தலைசுற்றவைக்கும் அபராத தொகை
கன்னட நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் சிக்கி கடந்த ஆறு மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார்.
அவர் 14.8 கிலோ தங்கத்துடன் துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையம் வந்தபோது கைதான நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அபராதம்
ரன்யா ராவ் அடிக்கடி துபாய்க்கு சென்று வந்த நிலையில் தங்க கடத்தல் மூலமாக அவர் மிகப்பெரிய அளவில் சம்பாதித்து இருக்கலாம் என தெரிகிறது. 2023ல் இருந்து 2025 மார்ச்சில் கைதாகும் வரை 52 முறை அவர் சென்று வந்திருக்கிறார்.
இந்நிலையில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ரன்யா 102 கோடி ரூபாய் அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதை அவர் செலுத்தவில்லை என்றால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் என தெரிகிறது.
சிறையில் இருக்கும் நடிகைக்கு இதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.