சிறகடிக்க ஆசை கோமதி ப்ரியாவை மிஸ் செய்த எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம்.. எமோஷனலாக பேசிய நடிகை
கோமதி ப்ரியா
சின்னத்திரையில் தற்போது கலக்கி கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் கோமதி ப்ரியா. சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து, இன்று தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
நம்ம வீட்டு பொண்ணுபா இது என சொல்லும் அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் கோமதி ப்ரியாவிற்கு சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார். இவருக்கு இயக்குநர் திருச்செல்வம் கையில் இருந்து விருது வழங்கப்பட்டது.
மிஸ் செய்த திருச்செல்வம்
இந்த நிலையில், இயக்குநர் திருச்செல்வம் குறித்து மேடையில் எமோஷனலாக பேசியுள்ளார். "நான் இயக்குநர் திருசெல்வம் சார் கையால் இந்த விருது வாங்குவேன் என நினைக்கவில்லை. இந்த நிகழ்ச்சிக்காக கீழே உட்கார்ந்திருக்கும் போது என்னுடன் திருச்செல்வம் சார் ரொம்ப பேசிக்கிட்டே இருந்தார். உங்களை நான் எப்படி மிஸ் பண்ணேன் தெரியல என்று கூறினார்.
பொதுவாக திருச்செல்வம் சாறுடன் சீரியல்களில், தமிழ் பொண்ணுகளுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால், மதுரையை சேர்ந்த பெண்ணான உங்களை எப்படி நான் மின் பண்ணேன் என்று அவர் மீண்டும் மீண்டும் கேட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
திருச்செல்வம் சார் இயக்கிய கோலங்கள் சீரியலில் இருந்து இப்போது எதிர்நீச்சல் சீரியல் வரை நான் பார்த்து இருக்கிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை அவர் பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி". என கூறினார்.

உக்ரைனுக்கான இராணுவத் திட்டங்களை வெளிப்படுத்திய கெய்ர் ஸ்டார்மர்: தயார் நிலையில் நேச நாடுகள் News Lankasri
