உலகளவில் 14 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
குட் பேட் அக்லி
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளிவந்த குட் பேட் அக்லி படம் மாபெரும் வசூல் வேட்டையாடி வருகிறது. அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக GBU மாறியுள்ளது.

10 நாட்களில் லாபத்தையும் கொடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களின் லிஸ்டில் குட் பேட் அக்லியும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அமோகமாக இருந்தது.
வசூல்
இந்த நிலையில் 14 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் இப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, GBU திரைப்படம் உலகளவில் 14 நாட்களில் ரூ. 248 கோடி வசூல் செய்துள்ளது.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    