3 நாட்களில் தமிழகத்தில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா..
குட் பேட் அக்லி
கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் தொடர் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தமிழகத்தில் முதல் நாளே ரூ. 30.9 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தனர்.
அஜித்தின் திரை வாழ்க்கையில் தமிழகத்தில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் GBU மாறியுள்ளது. ஃபேன் பாய் ஆதிக் ரவிச்சந்திரன் தனது ஹீரோ அஜித்திற்காக செய்த இந்த படம் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது.
திரையரங்கில் ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் தொண்டை கிழிகிறது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு மாஸ் மாஸ் மாஸ் தான் படத்தில் நிறைந்துள்ளது.
தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்
உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வரும் GBU திரைப்படம் தமிழகத்தில் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் 3 நாட்களில் ரூ. 73 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என உறுதியாக கூறப்படுகிறது.