7 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
குட் பேட் அக்லி
இதுவரை 2025ம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக குட் பேட் அக்லி உள்ளது. அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தார்கள்.
த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.
சென்ற வாரம் வெளிவந்த இப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. உலகளவிலும் சரி, தமிழகத்திலும் சரி இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல்
இந்த நிலையில் 7 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் குட் பேட் அக்லி அக்லி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 199 கோடி வசூல் செய்துள்ளது.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
