மீண்டும் ஓடிடியில் வந்த குட் பேட் அக்லீ.. இளையராஜா பாடலுக்கு பதில் என்ன வருகிறது பாருங்க
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் பாடல்கள் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது.
அதனால் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதன் பின் தடையை நீக்க கோரி தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. அதற்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதில் அளிக்க இளையராஜாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
மீண்டும் ஓடிடி-யில்..
இந்நிலையில் தற்போது குட் பேட் அக்லீ மீண்டும் நெட்பிலிக்ஸ் தளத்தில் வந்திருக்கிறது. படத்தில் வந்த ஒத்த ரூபாயும் தாரேன் உள்ளிட்ட பாடல் அனைத்தும் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கிறது.
அதற்கு பதிலாக ஜீ.வி.பிரகாஷின் பின்னணி இசை அதில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனை தீர்ந்தால் தான் மீண்டும் பழையபடி பாடல்கள் படத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.