வசூலில் வேட்டையாடி வரும் அஜித்தின் குட் பேட் அக்லி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
குட் பேட் அக்லி
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி.
இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
விமர்சனம் கலவையான இருந்தாலும், இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்து 18 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதுவரை உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 279 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 300 கோடி பாக்ஸ் ஆபிஸை தொடுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

யார் இருக்கிறார்கள் அங்கே... இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி உருக்கம் News Lankasri
