குட் பேட் அக்லி படத்தில் பிரசன்னாவின் கெட்டப் இதுவா.. வைரல் புகைப்படம்
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். பல கோடி ரசிகர்களை சம்பாதித்த இவர் தற்போது, விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது 63 - வது படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து அஜித் நடிக்கும் படங்கள் வெளிவர உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் நடத்தப்பட்டு தற்போது ஸ்பெயினில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
பிரசன்னாவின் கெட்டப்
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை நடிகர் பிரசன்னா பகிர்ந்துள்ளார். அதில், பிரசன்னா வித்தியாசமான கெட்டப்பில் குடுமியுடன் படத்தின் ரஷ்ஷை பார்ப்பது போன்று அந்த வீடியோ அமைந்துள்ளது.
தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரசன்னா வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
