அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி...
குட் பேட் அக்லி
கடந்த வருடம் திரையரங்குகளில் அஜித்தின் தரிசனம் கிடைக்கவில்லை.
ஆனால் 2025 அப்படி இல்லை, வருடம் ஆரம்பித்ததும் பிப்ரவரி மாதமே விடாமுயற்சி படம் மூலம் கொண்டாட்டத்தை கொடுத்தார். அப்படம் கொண்டாட்டம் முடிந்த கையோடு தனது அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தையும் ரிலீஸ் செய்துவிட்டார்.
நேற்று பிப்ரவரி 10, படத்தை முதல் நாள் பார்த்த ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
பாக்ஸ் ஆபிஸ்
கதை என்ன இருந்தாலும் என்ன நாங்கள் அஜித்தை கொண்டாடுவோம் என ஒரு கூட்டம், என்னதான் கதை என பார்க்கும் ஒரு கூட்டம் என குட் பேட் அக்லி படத்தை பலரும் பலவிதமான ரசனையில் பார்த்து வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது.
சென்னையில் மட்டுமே ரூ. 2.5 கோடியும், தமிழகத்தில் ரூ. 35 கோடிக்கு மேலாகவும் வசூலித்த குட் பேட் அக்லி மொத்தமாக முதல் நாள் மட்டுமே ரூ. 65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
