குட் பேட் அக்லி படத்தில் இடம்பெறும் ரீமிக்ஸ் பாடல்.. வெறித்தனமான அப்டேட்
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி படம் வெளிவரவுள்ளது.
இதை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
வெறித்தனமான அப்டேட்
ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, குட் பேட் அக்லி படத்திற்காக அஜித்தின் எவர்கிரீன் ஹிட் 'தீனா' திரைப்படத்தில் இருந்து வத்திக்குச்சு பத்திக்காதுடா என்ற பாடலை ரீமிக்ஸ் செய்ய உள்ளாராம் ஜிவி பிரகாஷ்.
இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தற்போது இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.