ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் குட் பேட் அக்லி.. இதுவரை எவ்வளவு தெரியுமா
குட் பேட் அக்லி
நடிகர் அஜித்தின் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் வெளிவருவது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
கடந்த பிப்ரவரி மாதம் விடாமுயற்சி திரைப்படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதுவும் அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளிவரவுள்ள நிலையில், ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
வசூல் வேட்டையில் GBU
ஆம், ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில், குட் பேட் அக்லி படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 50 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது.
ப்ரீ புக்கிங்கில் இதுவரை அஜித்தின் திரை வாழ்க்கையில் எந்த ஒரு படமும் செய்யாத வசூல் சாதனையை இப்படம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
