வசூல் வேட்டையை முன்பதிவிலேயே ஆரம்பித்த குட் பேட் அக்லி.. மாஸ் காட்டும் அஜித்
குட் பேட் அக்லி
வருகிற ஏப்ரல் 10ம் தேதி அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவரவுள்ளது.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நடித்துள்ளனர். இதில் அர்ஜுன் தாஸ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
ரிலீஸுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் மேல் இருக்கும் நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கிய இப்படத்தின் முன்பதிவு பட்டையை கிளப்பி வருகிறது.
முன்பதிவி
இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 10 லட்சத்திற்கும் மேல் வசூலை முன் பதிவிலேயே அள்ளிவிட்டது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படத்தின் வசூல் அஜித்தின் கேரியர் பெஸ்ட் வசூலாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan
