தமிழ்நாட்டில் மட்டுமே குட் பேட் அக்லி இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? எவ்வளவு தெரியுமா
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித் குமார். இவருடைய படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸில் நடக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் அஜித் நடிப்பில் வெளிவந்தன. இதில் விடாமுயற்சி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், குட் பேட் அக்லி பட்டையை கிளப்பி வருகிறது.
தமிழக வசூல் விவரம்
குறிப்பாக தமிழ்நாட்டில் முதல் நாளில் இருந்த இப்படத்தின் வசூல் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளே ரூ. 30.9 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அஜித்தின் கரியர் பெஸ்ட் படமாகவும் இதுவே உள்ளது.
இந்த நிலையில் 18 நாட்களில் இப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 179 கோடி வசூல் செய்துள்ளது.