தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அஜித்தின் குட் பேட் அக்லி.. எப்போது, எந்த டிவியில் தெரியுமா?
குட் பேட் அக்லி
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர், பிரபு, பிரசன்னா என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் அஜித் ரசிகர்களை முழுமையாக திருப்திபடுத்தியது. மேலும், அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சியில் GBU
அஜித்தின் மாபெரும் வெற்றிப்படமான குட் பேட் அக்லி எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், TRP-யில் எப்போது சாதனை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

லீடர் திரைப்படத்தின் மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸ்.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று சன் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் குட் பேட் அக்லி TRP-யில் எவ்வளவு பெரிய சாதனை படைக்கப்போகிறது என்று.