குட் பேட் அக்லி படத்தின் டைட்டிலை வைத்ததே அவர் தான்.. உண்மையை சொன்ன இயக்குநர்
குட் பேட் அக்லி
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக அஜித்துடன் நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இரண்டு தினங்களுக்கு முன் படத்தின் முதல் பாடலான ஓ.ஜி. சம்வம் வெளியானது.
அவர் தான்
இந்நிலையில், குட் பேட் அக்லி படம் குறித்து இயக்குநர் கூறிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், " குட் பேட் அக்லி படத்தில் இருக்கும் மூன்று கேரக்டர்கள் அனைவருக்குள்ளுமே இருக்கும்.

இந்த படத்திற்கான டைட்டிலை அஜித்தான் கொடுத்தார். அவர் இந்த பெயரை கொடுத்தது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது" என்று கூறியுள்ளார்.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri