'குட் பேட் அக்லி' படத்தில் நடிகர் பிரசன்னாவை தொடர்ந்து இணைந்த மற்றொரு பிரபல நடிகர்.. யார் தெரியுமா
குட் பேட் அக்லி
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தற்போது அவரது 63 - வது படமான 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
சமீபத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
அவ்வப்போது அஜித்தின், குட் பேட் அக்லி படம் குறித்தும், அதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.
இணைந்த மற்றொரு நடிகர்
அந்த வகையில், சமீபத்தில் நடிகர் பிரசன்னா அவரது இன்ஸ்டா பக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கும் தகவலை உறுதி செய்தார்.

பாக்கியலட்சுமி நடிகர் முதல் CWC போட்டியாளர்கள் வரை.. வெளிவந்த பிக் பாஸ் சீசன் 8 உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட்
அதை தொடர்ந்து, இந்த படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, இந்த படத்தில் பிரசன்னாவை தொடர்ந்து நடிகர் பிரபு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே, அஜித் நடித்த ’பில்லா’மற்றும் 'அசல்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சுமார் 14 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அஜித்துடன் இணைந்து பிரபு நடிக்க உள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
