குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கியது.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா
குட் பேட் அக்லி
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் வெளிவந்த ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற நிலையில், அதை தொடர்ந்து வெளியான முதல் பாடலும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த வாரம் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளிவரும் என கூறப்படுகிறது.
ப்ரீ புக்கிங்
இப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில், வட அமெரிக்காவில் இப்படத்திற்கான ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது.
இந்த ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 2.5 லட்சம் வரை குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இப்படத்திற்கு வட அமெரிக்காவில் கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.