வெளிநாட்டில் வசூல் சாதனை படைக்கும் குட் பேட் அக்லி.. இதுவரை எவ்வளவு தெரியுமா
குட் பேட் அக்லி
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.
அஜித்தின் திரை வாழ்க்கையில், முதல் நாள் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படமாக குட் பேட் அக்லி தற்போது உள்ளது.
மேலும் இரண்டு நாட்களை இப்படம் வெற்றிகரமாக கடந்திருக்கும் நிலையில் உலகளவில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கண்டிப்பாக விரைவில் ரூ. 500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு வசூல்
இந்த நிலையில், 2 நாட்களில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிநாடுகளில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளிநாடுகளில் 2 நாட்களில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
அஜித்தின் திரை வாழ்க்கையில் வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த படம் துணிவு. இப்படம் ரூ. 60 கோடி வசூல் செய்திருந்தது. இந்த வசூல் சாதனையை இன்னும் 3 நாட்களில் குட் பேட் அக்லி முறியடிக்கும் என கூறப்படுகிறது.

மலைபோல் குவிந்துள்ள சொத்தில் 1 சதவீதம் மட்டுமே பிள்ளைகளுக்கு... பில்கேட்ஸ் கூறும் காரணம் News Lankasri
