ப்ரீ புக்கிங்கில் இதுவரை குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ
குட் பேட் அக்லி
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
த்ரிஷா, சுனில், பிரசன்னா மற்றும் அர்ஜுன் தாஸ் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த டீசர் மற்றும் முதல் பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ப்ரீ புக்கிங்
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் ப்ரீ புக்கிங்கில் வசூலை அள்ளி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில், இதுவரை ரூ. 12 லட்சத்திற்கும் மேல் வசூல் ஆகியுள்ளது.
இப்படம் முதல் நாள் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.