குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளார். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர்.
மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவிருக்கும் நிலையில், நாளை டிரைலர் வெளிவரும் என கூறப்படுகிறது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், ப்ரீ புக்கிங்கில் குட் பேட் அக்லி படம் இதுவரை செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 7 நாட்கள் இருக்கும் நிலையில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.