ப்ரீ புக்கிங்கில் இதுவரை குட் பேட் அக்லி செய்துள்ள அதிரடி வசூல்.. அடேங்கப்பா இவ்வளவா?
குட் பேட் அக்லி
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக அஜித்துடன் நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இப்படத்தின் முதல் பாடலான ஓ.ஜி. சம்வம் வெளியானது.
எவ்வளவு தெரியுமா?
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் ப்ரீ புக்கிங்கில் வசூலை குவித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில், இதுவரை ரூ. 20 லட்சம் வரை இப்படம் வசூல் செய்துள்ளது. இதனால் இப்படம் முதல் நாள் வெளியாகி உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கிற்கு 3-வது போர் கப்பல் தாக்குதல் குழுவை அனுப்பிய அமெரிக்கா - ஈரானுக்கு எச்சரிக்கை News Lankasri
இரத்த சர்க்கரை முதல் சரும ஆரோக்கியம் வரை.., தினமும் காலையில் ஒரு கப் இந்த தண்ணீர் போதும் News Lankasri