குட் பேட் அக்லீ இப்போதே இத்தனை காட்சிகள் Housefull-ஆ? பிரம்மாண்ட ஓப்பனிங் உறுதி
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்காக தான் தற்போது ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக அஜித்தின் முந்தைய படம் விடாமுயற்சியில் மாஸ் காட்சிகள் எதுவுமே இல்லை என ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள்.
அதை தீர்த்து வைக்கும் விதமாக தான் குட் பேட் அக்லீ படம் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடும் வகையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஹவுஸ்ஃபுல்
படத்தின் முன்பதிவு கடந்த சில தினங்களாக மிக வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளே படத்தை பார்க்க ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் தற்போது சுமார் 1800 காட்சிகள் தமிழ்நாட்டில் முன்பதிவிலேயே ஹவுஸ்புல் ஆகி இருக்கிறதாம்.
அதனால் குட் பேட் அக்லீ மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் பெறும் என உறுதியாக கூறுகிறார்கள்.