விடாமுயற்சியை விட 10 மடங்கு அதிகமாக அஜித்தின் குட் பேட் அக்லியில் அது இருக்கும்... பிரபலம் ஓபன் டாக்
அஜித்
ரசிகர்கள் அஜித் நடிப்பில் பெரிதும் எதிர்ப்பார்த்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியாகி இருந்தது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்துடன், த்ரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா என பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில் படம் வெளியாகி இருந்தது. ரசிகர்கள் சில வருடங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் காண்பதால் செம சந்தோஷத்தில் உள்ளனர்.
குட் பேட் அக்லி
விடாமுயற்சி படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திவர இப்போது குட் பேட் அக்லி படம் குறித்த தகவல்கள் வலம் வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள சுப்ரீம் சுந்தர் ஒரு பேட்டியில், விடாமுயற்சி படத்தை விட பத்து மடங்கு அதிகமாக மாஸ் காட்சிகள் குட் பேட் அக்லி படத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நீங்கள் குட் பேட் அக்லி படத்தை பார்க்க செல்லும் போது விக்ஸ் மற்றும் ஹால்ஸ் உங்களுக்கு தேவைப்படும், படம் முழுவதும் கத்திக் கொண்டே இருப்பீர்கள், இதனால் தொண்டை வலியே வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
