தமிழகத்தில் 4 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
குட் பேட் அக்லி
அஜித் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளிவந்தாலே, அப்படம் வசூலில் மாபெரும் அளவில் சாதனை படைக்கும்.
அந்த வகையில் கடந்த வாரம் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் நான்கு நாட்களில் உலகளவிலும் சரி தமிழகத்திலும் சரி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களால் இப்படம் மாபெரும் அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக வசூல்
இந்த நிலையில், வெற்றிகரமாக 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் இதுவரை தமிழகத்தில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 4 நாட்களில் ரூ. 91 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் இப்படத்தின் வசூல் மாபெரும் அளவில் இருக்கும்.

ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan