தமிழகத்தில் 5 நாட்களில் குட் பேட் அக்லி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
குட் பேட் அக்லி
ரசிகர்களால் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி.
இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். அதுவும் ஒரு ஃபேன் பாயாக இப்படத்தை தரமாக எடுத்திருந்தார்.
ஒவ்வொரு காட்சியிலும் அஜித்தை கொண்டாடும் தருணங்கள், ரெட்ரோ சாங்ஸ், மாஸ் சண்டை காட்சிகள், அஜித்தின் ரெஃபரென்ஸ் என படம் தீயாக இருந்தது.
விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களை முன் வைத்தாலும், படத்தின் வசூல் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
தமிழக வசூல்
இந்த நிலையில், 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 107 கோடி வசூல் செய்துள்ளது.

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri
