அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... என்ன தெரியுமா?
அய்யனார் துணை
அய்யனார் துணை, 4 அண்ணன்-தம்பிகளின் பாசக் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் சீரியல்.
இப்போது கதையில் பாண்டியன் தனது அண்ணனுக்கு திருமணம் ஆகாமல் நான் திருமணம் செய்ய மாட்டேன் என வானதியிடம் கூறிவிட்டார்.
வானதி இந்த விஷயத்தை சேரனிடம் கூற தன்னால் தனது தம்பிக்கு பிரச்சனை என வேக வேகமாக திருமணம் செய்து விவாகரத்து ஆகப்போகும் பெண்ணை திருமணம் செய்ய முடிவு எடுக்கிறார்.

இன்றைய எபிசோடில், சேரன் அந்த பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ய அனைவரையும் அழைக்கிறார். ஆனால் மற்ற யாருக்கும் இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை.
குட் நியூஸ்
தற்போது சீரியல் குறித்து வந்த குட் நியூஸ் என்னவென்றால் தமிழில் உருவாக்கப்பட்ட இந்த சீரியல் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகிறது என்பது நமக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயம்.
சமீபத்தில் அய்யனார் துணை சீரியல் தெலுங்கில் ரீமேக் ஆகி இருந்தது, தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆக உள்ளதாம்.
தமிழில் தயாரான ஒரிஜினல் அய்யனார் துணை சீரியல் இப்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் ஆகி ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.